புஷ்பா 2 பட மோகத்தால் தொடரும் சோகம்... தாயை தெடர்ந்து மகனும்... 

 

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி வெளியாவதற்கு முதல் நாள் ஆன டிசம்பர் 4 ஆம் தேதி திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். இதன் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்  ஒருவர் உயிரிழந்து உள்ளதோடு அவருடைய மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் முளைச் சாவடைந்த நிலையில், இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த சிறுவன் கடந்த 14 நாட்களாகவே சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது இவ்வாறு உயிரிழந்து உள்ளதோடு, தாயைத் தொடர்ந்து மகனும் உயரிழிந்த இந்த சம்பவம் பலருக்கு பேரதிர்ச்சியாக காணப்படுகின்றது.

ஏற்கனவே தாய் இறந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் ஜெயிலுக்கு சென்று வந்திருந்தார். ஆனாலும் தான் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இந்த சிறுவனும் உயிரிழந்துள்ளமை தென்னிந்திய  திரைத்துறை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.