புஷ்பா-னா ஃபயர்..! இன்று மாலை வெளியாகிறது மாஸ் ட்ரைலர்..! 

 

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் தற்பொழுது டிரைலர் வரும் நவம்பர் 17 ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.டிரைலர் பீஹாரின் பாட்னா நகரில் நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் டிரைலர் 2.44 நிமிடம் ஓடுமளவு வெட்டப்பட்டுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.