ராதிகா, ஊர்வசியிடம் சிக்கிய ராஷ்மிகா- கலாயோ கலாய் தான்..!

 

படப்பிடிப்பு தளத்தில் நவராத்திரி பாட்டுப் பாடி நடிகை ராஷ்மிகா மந்தனாவை ராதிகா மற்றும் ஊர்வசி கலாய்க்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் திருமலா கிஷோர் என்பவர் இயக்கி வரும் படம் ‘ஆடவார்லு நீக்கு ஜோகர்லு’. இந்த படத்தில் சர்வானந்த் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா மற்றும் ஊர்வசி நடித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ராஷ்மிகாவை வைத்து வரவேற்கும் விதமாக ஒரு வீடியோ பதிவிட்டுள்ளனர்.

அதன்படி சிவாஜி கணேசன், சவாத்திரி நடித்த ‘நவராத்திரி’ படத்தில் இடம்பெற்றுள்ள  ‘நவராத்திரி சுப ராத்திரி’ பாடலை ராதிகாவும், ஊர்வசியும் பாட நடுவில் நிற்கும் ராஷ்மிகா மந்தனா அழகாக எக்ஸ்பிரஷன் தந்துள்ளார்.

நவராத்திரியை வரவேற்கும் விதமாக நடிகை ராதிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இதை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த பதிவில் ரஷ்மிகா மந்தான்னா உடன் நவராத்திரி பாடல், அவர் பார்ப்பதற்கு சாவித்ரியை நினைவூட்டுகிறார். ஆண்டவாலு நீக்கு ஜோகர்லு ஸ்பெஷல்" என்று குறிப்பிட்டுள்ளார்.