அறக்கட்டளை சார்பில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்..!
நடிகர் ராகவா லாரன்ஸ், மாற்றம் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவை லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஹாய் ஸ்வேதா, கவலைப்படாதே, இன்றிலிருந்து நீ என் சொந்த குழந்தை, நான் எப்போதும் உங்களுக்காக இருப்பேன். இரண்டு நாட்களில் உங்களை சந்திப்பேன் என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மாற்றம் அறக்கட்டளை சார்பில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்,
தலைவர் சூப்பர் ஸ்டாரை மாற்றம் அமைப்பிற்காக ஆசிகளைப் பெற சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றும். குருவே சரணம் என்றும் ரஜினிகாந்துடன் உள்ள தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.