தமிழில் ஹிட்டான இந்தி ரீமேக் படத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்..!

 
தமிழில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற சைக்காலஜி த்ரில்லர் படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி, முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்ற் திரைப்படம் ராட்ச்சன்.

முன்னதாக தமிழில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் நடித்திருந்தனர். அந்த படமும் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக அக்‌ஷய் குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்குகிறது. தமிழைக் காட்டிலும் மிகுந்த பொருட்செலவில் தயாராகிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.