ரஜினி பட நடிகர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்..!

 
தனது இயல்பான நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் மனதில் நிலைத்த இடத்தைப் பிடித்த தனபால், திரைத்துறையில் தனது தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார்.தனபாலின் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது சாதனைகள், குணச்சித்திரமான கதாபாத்திரங்களின் வாயிலாக என்றும் நினைவில் நிறைந்திருக்கும் என பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
அவரின் இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெறவுள்ளன. திரைத்துறையின் முன்னோடி என்ற பெருமையை தாங்கிய அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பாகும்.
நடிகர் தனபால் தனது அறுபதாண்டு திரை வாழ்க்கையில், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த முக்கிய திரைப்படங்களில் ரஜினிகாந்த்தின் "நான் மகான் அல்ல" மற்றும் விஜயகாந்த்தின் "சொக்கத்தங்கம்" குறிப்பிடத்தக்கது.