வைரலாகும் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் புகைப்படம்..! 

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 170-வது படமான தலைவர் 170-ல், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். இதில். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரஜினி 170 படத்தின் படப்பிடிப்பின் இடையே ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.