கூலி படத்தை பார்த்துவிட்டு உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினிகாந்த்..!
கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் துவங்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் ரஜினி கூலி திரைப்படத்தை பார்த்துள்ளாராம். கூலி முழு படத்தையும் டப்பிங் ஸ்டுடியோவில் ரஜினி பார்த்தாராம்.
படம் பார்த்து முடித்த பிறகு ரஜினி லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம். பிறகு இப்படம் எனக்கு இன்னொரு தளபதி என்றாராம் ரஜினி. கூலி திரைப்படம் தளபதி போல இருப்பதாக ரஜினி லோகேஷ் கனகராஜிடம் கூறியதாக வந்த தகவல் தான் தற்போது வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது.
ஏற்கனவே கூலி திரைப்படத்தின் மீது மாபெரும் ஹைப் இருந்து வருகின்றது. நாகர்ஜுனா, ஆமீர் கான் போன்றவர்கள் கூலி திரைப்படத்தை பற்றி பேசிய விஷயங்கள் ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கின்றது. அவர்கள் இப்படத்தின் மீதான ஹைப்பை மேலும் அதிகரித்துவிட்டனர். இந்த சமயத்தில் தற்போது ரஜினி கூலி திரைப்படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தி இருக்கின்றது.
இந்நிலையில் கூலி திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தற்போது வரை படத்தை பற்றி வெறும் பாசிட்டிவ் டாக் மட்டும் தான் இருந்து வருகின்றது.படத்தின் காஸ்டிங் முதல் படத்திலிருந்து வெளியான அப்டேட்ஸ் வரை அனைத்துமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் டைட்டில், போஸ்டர், பாடல்கள் என அனைத்துமே ஹைலைட்டாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில் இப்படத்திலிருந்து சிகிட்டு மற்றும் மோனிகா என இரு பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவ்விரு பாடல்களும் வழக்கம் போல மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்துள்ளது. அனிருத் மற்றும் டி.ராஜேந்தர் கூட்டணியில் வெளியான சிகிட்டு பாடல்செம வைபான ஒரு பாடலாக அமைந்தது. இப்பாடலில் ரஜினி சிறப்பாக நடனமாடி இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து பூஜா ஹெக்டேவின் நடனத்தில் வெளியான மோனிகா பாடல் வேற லெவல் வைபை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. குறிப்பாக பூஜா ஹெக்டே மற்றும் சௌபினின் நடனம் அசத்தலாக இருந்தது.
தற்போது வரை இவ்விரு பாடல்கள் தான் யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதைத்தொடர்ந்து இம்மாதம் இறுதியில் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அநேகமாக ஜூலை 29 ஆம் தேதி கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிகின்றது. அப்போது இப்படத்தில் இருந்து மீதமுள்ள பாடல்கள் வெளியாகுமாம். மேலும் ஆகஸ்ட் முதல் வாரம் கூலி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.எனவே அடுத்த ஒரு மாதத்திற்கு ரஜினிரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.