ரஜினிகாந்த் - சசிகலா திடீர் சந்திப்பு..! 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் போயஸ் கார்டனை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியே பரபரப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவும் சிறைக்கு போய்விட்டதால் அந்த பகுதி அமைதியாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது சிறையில் இருந்து விடுதலை ஆகி திரும்பி உள்ள சசிகலா ஜெயலலிதாவின் வீட்டிற்கு எதிரே புதிய ஆடம்பர பங்களா ஒன்றை கட்டி உள்ளார் என்பதும் சமீபத்தில் தான் இந்த பங்களாவின் கிரகப்பிரவேசம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவின் புதிய வீட்டில் இருந்து சில மீட்டர் தூரமே ரஜினிகாந்த் வீடு உள்ள நிலையில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக ’வேட்டையன்’ படப்பிடிப்பில் இருந்ததால் சசிகலாவின் புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் இன்று சசிகலா வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்றதாகவும் அவர் புதிய வீட்டில் குடியேறியதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்பட்டு இருக்குமா? என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.