வெற்றிமாறனையும், சூரியையும் மாறி... மாறி... புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்..!!
விடுதலை படம் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் விடுதலை இரண்டம பாகத்தை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Apr 9, 2023, 09:05 IST
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சினிமா ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
தொடர்ந்து விடுதலை படம் பார்ப்பதற்காக மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது. விடுதலை படத்தை பார்த்த மற்ற திரையுலக பிரபலங்கள் வெற்றிமாறன் மற்றும் சூரியை பாராட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் விடுதலை படத்தை பார்த்தார்.