ரஜினிகாந்த் நடிக்கும் கடைசிப் படம்- இயக்குநர் இவர்தான்.!!
ரஜினிகாந்த் நடித்த படங்களில் கடைசியாக மெஹா ஹிட்டானது எந்திரன் தான். அவருடைய மகள் சவுந்தர்யாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கோச்சைடையான் படம். இது முற்றிலும் ஒரு அனிமேஷன் படமாகும். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வி அடைந்தது.
அதை தொடர்ந்து லிங்கா, கபாலி, காலா, 2.0, பேட்ட, தர்பார், அண்ணாத்த என்று வரிசையாக தோல்வி படங்களில் தான் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில் கபாலி, 2.0, பேட்ட போன்ற படங்களில் வெற்றி அடைந்தன. எனினும், ரஜினிகாந்த் படங்களுக்குரிய மெஹா ஹிட் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு ஓரளவுக்கு தான் லாபம் கிடைத்தது.
இதனால் ஒரு பெரும் வெற்றிக்காக ரஜினிகாந்த் கடுமையாக போராடி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஜெயிலர்’ படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். அதை தொடர்ந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று லால் சலாம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு கவுரவ வேடம் தான். அடுத்தது ஞானவேல் இயக்கும் புதிய படம்.
இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. விரைவில் இதற்கான அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கன்னடத்தில் வெளியான ‘காந்தாரா’ படம் ரஜினிகாந்தை மிகவும் கவர்ந்துவிட்டது. அப்பட இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் தான் நடிக்கும் கடைசிப் படத்தை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது இயக்குநர் ரிஷப் காந்தாரா இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். அது முடிந்ததும் ரஜினிகாந்தின் படம் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.