கண்கலங்கி பேசிய ரஜினி..! வாழ வச்ச தமிழக மக்களுக்கு நன்றி..! 

 

நடிகர் ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். இதன் காரணமாக இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் பத்தாம் தேதி ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. தற்போது இந்த படத்திற்கு பிரமோஷன் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

நேற்றைய தினம் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்  குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்களும் வைரலாகி வருகின்றது.

மேலும் பல சுவாரசியங்கள் இருந்த போதிலும் ரஜினி சொன்ன கழுதை -டோலி கதை, அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பல மலரும் நினைவுகள் மற்றும் படம் குறித்த சுவாரசியங்கள் குறித்த பேச்சு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. படத்தில் தன்னுடன் நடித்த ஒவ்வொரு நடிகர்கள் குறித்தும் அவர் தன்னுடைய கருத்துக்களை சொல்ல தவறவில்லை.

இந்த நிலையில், தான் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் கன்னட மொழி மட்டுமே தெரிந்த நிலையில் தமிழ் மொழி தெரியாமல் கையில் காசு இல்லாமல் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியதாகவும் குறிப்பிட்ட ரஜினிகாந்த், தன்னுடைய நம்பிக்கையை தமிழக மக்கள் பொய்யாக்க வில்லை என்று கண்கலங்கி பேசியுள்ளார். மேலும் தமிழக மக்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.