விரைவில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம்… வைரலாகும் திருமண அழைப்பிதழ்..!

 

தமிழில் கௌதம் கார்த்தி நடித்த என்னமோ ஏதோ படத்தில், நாயகியாக அறிமுகமானார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, எச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து என்ஜிகே படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். தேவ் படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

தெலுங்கில் ராம்சரண், ரவி தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்தியிலும், அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் என டாப் நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். இவர் ஜாக்கி பாக்னானி என்ற நடிகரை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் அண்மைக் காலமாக உலா வந்தன. இதனிடையே ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண அழைப்பிதழின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றனர். வரும் 21-ம் தேதி இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக ரகுல் ப்ரீத் இதுவரை அறிவிக்கவில்லை.