நல்ல செய்தி சொன்ன ரன்வீர் – தீபிகா..!

 
1

பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்வீர் – தீபிகா ஜோடி நீண்ட நெடு நாட்களாக காதலர்களாக இருந்த இந்த ஜோடி கடந்த 2018 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்னரும் இருவரும் அவரவர் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து பல வெற்றி படங்களை கொடுத்தனர். இந்நிலையில் வேறு ஏதும் நல்ல செய்தி சொல்லமாட்டார்களா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் தற்போது இந்த ஜோடி சிறப்பான தரமான குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

சற்று முன் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் சில பொருட்களை பதிவு செய்து நடுவில் ’செப்டம்பர் 2024’ என்று குறிப்பிட்டு உள்ளனர் .

இதன் மூலம் தீபிகா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர் .இதையடுத்து திரைபிரபலங்கள் பலரும் ரன்வீர் – தீபிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.