வைரலாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர வீடியோ..! ராஷ்மிகாவுக்கு ரொம்ப வெயிட்டான கேரக்டர் போல... 

 

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் தான் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கமுலா இயக்கியுள்ளார்.

குபேரா படத்தில் இருந்து ஏற்கனவே நடிகர் தனுஷின் தோற்றம் மற்றும் நாகார்ஜுனா தொடர்பான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.

அதன்படி தற்போது வெளியான வீடியோவில் ராஷ்மிகா மந்தனா, பிணக்குழி ஒன்றைத் தோண்டி அதில் இருந்து பெட்டி ஒன்றை பேராசையுடன் எடுக்கின்றார். அதை எடுத்து திறந்து  பார்க்கும்போது குறித்த பெட்டி முழுக்க பணமாக காணப்படுகின்றது.

இதன் காரணத்தால் குபேரா படத்தில் ராஷ்மிகா தனுசுக்கு ஜோடியாக மட்டும் நடிக்காமல், அவருடைய கேரக்டர் ரொம்பவும் வெயிட்டானது என்று இந்த காட்சியைப் பார்த்தாலே தெரிகின்றது. இதை பார்த்த ரசிகர்களும் ராஷ்மிகாவின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள்.

அத்துடன் பணபட்டியை திறந்து பார்த்ததும் ராஷ்மிகா ஒரு நிமிடம் சந்திரமுகி ஆகவே மாறிவிட்டார் என்று நெட்டிசன்களும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.