விஜய் தேவரகொண்டாவுடன் பிரேக்-அப்; வேறொரு நடிகரை டேட் செய்யும் ராஷ்மிகா..!!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வந்த ராஷ்மிகா மந்தனா, அவரை பிரேக்-அப் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

விஜய் தேவரகொண்டாவை பிரிந்துவிட்ட பின், நடிகை ராஷ்மிகா மந்தனா பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பலமுறை பாப்பராசியின் கேமராக்களுக்கு சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் உறவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தாங்கள் வெறும் நண்பர்கள் என்று அடிக்கடி கூறி வந்தனர். ஆனால் இருவரும் விடுமுறையை மாலத்தீவில் ஒன்றாகக் கழித்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ராஷ்மிகா தற்போது ராஷ்மிகா வேறொரு நடிகருடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.அவர் வேறுயாரும் இல்லை பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் தான். கடந்த சில நாட்களாக இருவரும் ஒன்றாக சுற்றும் படங்களை பாப்ராசிக்கள் வெளியிட்டு வருவதாக தெலுங்கு ஊடகங்கள் கூறுகின்றன.

மும்பை விமான நிலையத்திலிருந்து இருவரும் ஒன்றாக வந்ததாகவும், அதை தொடர்ந்து இருவரும் இணைந்து பல பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாள், அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் தொடக்க விழாவில் ராஷ்மிகா நடனமாடினார். இந்நிகழ்வில் ஸ்ரீநிவாஸும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டதால் தான், ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவை பிரிந்துவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் விஜய்யும், ராஷ்மிகாவும் இணைந்து நடித்துள்ளனர். ராஷ்மிகா எப்போதும் விஜய் தேவரகொண்டாவை 'நல்ல நண்பன்' என்று குறிப்பிட்டு வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா கடைசியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சந்தீப் ரெட்டி வாங்காவின் அனிமல் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ படம் அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. வி.வி. விநாயக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீநீவாஸ் கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.