சினிமாவில் இருந்து குட்டி பிரேக் எடுக்கும் ராஸ்மிகா... என்னாச்சு ? 

 

 ராஷ்மிகா மந்தனா தற்போது ஏஆர் முருகதாஸ், சல்மான் கானுடன் தற்போது இணைந்துள்ள சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சல்மான் கானுடன் ராஷ்மிகா நடித்து வருவதால் இத்திரைப்படம் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா பிஸியாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு உடற்பயிற்சி கூடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அவரின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் சிறிது காலம் சினிமா சார்ந்த வேலைகளில் ஈடுபட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் காஜல் அகர்வாலும் நடிக்கிறார். இத்திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகிறது. மேலும், ராஷ்மிகா ‘தாமா’ என்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

 

இவர் கதாநாயகியாக நடித்த சாவா என்ற திரைப்படம் வரும் பிப்.14ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் லஷ்மண் உத்தேகர் இயக்கி உள்ளார். கதாநாயகனாக விக்கி கௌசல் நடித்துள்ளார்.