சீரியல் இயக்குநரை திருமணம் செய்யும் ரட்சிதா மகாலக்ஷ்மி..?

சின்னத்திரையில் பிரபலமான நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி விரைவில் சீரியல் இயக்குநரை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

கர்நாடகாவைச் சேர்ந்த ரட்சிதா மஹாலக்ஷ்மி தமிழில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, உடன் நடித்த தினேஷ் கோபால்சாமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சில ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும் இருவரும் இன்னும் விவகாரத்துக்கு விண்ணப்பிக்கவில்லை. இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கெடுத்தார் ரட்சிதா. அப்போது நடப்பு சீசனில் தனது ஆதரவு மனைவி ரட்சிதாவுக்கு தான் என்று தினேஷ் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அதனால் ரட்சிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன், கணவருடன் சேர்ந்து வாழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் சந்திக்கக்கூடவில்லை. இந்நிலையில் தினேஷ் தனது தரப்பில் இருந்து விவகாரத்துக்கு விண்ணப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் ரட்சிதா தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை தத்தெடுக்கவுள்ளதாக சமூகவலைதளத்தில் அறிவித்தார். அதனுடைய நிலைபாடு என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அதற்குள் அவர் சீரியல் இயக்குநர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரட்சிதா இலங்கையில் நடந்து வரும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். விரைவில் இந்தியா திரும்பியவுடன் இதுதொடர்பான உண்மை விவரங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.