ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் நடிகர் ரஜினிகாந்த் எவ்வளவு தான் காக்கா உயர பறந்தாலும், கழுகு அதை விட உயரத்தில் பறந்து செல்லும் என பேசியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி மூலம் அதற்கு பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆடியோ லான்ச்சே நடைபெறவில்லை. இந்நிலையில், ரத்னகுமார் தற்போது லியோ வெற்றி விழாவில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி அரங்கத்தை அதிர வைத்துள்ளது.
லியோ வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார் தனக்கு சினிமா ஆசை வர காரணமே தளபதி விஜய் தான் என்றும், நாம எவ்ளோ உயர பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரத்னகுமார் அப்படி பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்து கரவொலிகளை எழுப்பியதாக உள்ளே இருந்து பலர் தகவல் தெரிவித்துள்ளனர்.