‘ராயன்’ டிரைலருக்கு குவியும் விமர்சனங்கள்..!

 
தனுஷ் நடித்த இயக்கிய அவரது ஐம்பதாவது திரைப்படமான ’ராயன்’ படம் வரும் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் மற்ற ரசிகர்கள் வழக்கம் போல் இதுவும் ஒரு வன்முறை படமா, டிரைலர் முழுவதும் ஒரே வெட்டுக்குத்தாக இருக்கிறது, வெற்றிமாறன் படத்தில் நடித்ததில் இருந்து நீங்கள் இப்படித்தான் மாறிவிட்டீர்கள், அவர் உங்களை கெடுத்து வைத்திருக்கிறார்’ என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.



தனுஷ் ஆரம்பத்தில் ’யாரடி நீ மோகினி’ போன்ற ரொமான்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவரது படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. ஆனால் அவர் அதிரடி ஆக்சன் சினிமாவுக்கு மாறிய பிறகு அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’ஆடுகளம்’ ’பொல்லாதவன்’ ’அசுரன்’ போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் ’கேப்டன் மில்லர்’ உள்பட பல ஆக்சன் படங்கள் தோல்வியை தான் அடைந்துள்ளன.

அந்த வகையில் ’ராயன்’ திரைப்படமும் ஒரு ஆக்சன் படம் என்பது டிரைலர் மூலம்  தெரியவந்துள்ளதை அடுத்து நீங்கள் எப்போது ’யாரடி நீ மோகினி’ போன்ற படங்களுக்கு மாறப் போகிறீர்கள் என்றும், இந்த அடிதடி கதைகள் எல்லாம் வேண்டாம் என்றும், நெட்டிசன்கள் அட்வைஸ் தெரிவித்து வருகின்றனர். இந்த அட்வைஸை தனுஷ் ஏற்றுக் கொள்வாரா? அல்லது தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

<a href=https://youtube.com/embed/qQJJWhh-XRo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qQJJWhh-XRo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">