இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது "ராயன்" ட்ரைலர்..!
Jul 16, 2024, 12:58 IST
தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.