பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரேஷ்மா..??

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து சதீஷ், விலகுகிறாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாத நிலையில், அதே தொடரில் நடித்து வரும் மற்றொரு பிரபலம் விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
 
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் இந்த சீரியலை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். குறிப்பிட்ட சினிமா மற்றும் சீரியல் பிரபலங்கள் கூட பாக்கியலட்சுமி சீரியலில் தொடர் பார்வையாளர்களாக உள்ளனர்.

முன்னதாக இதில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களிலும் கலந்துகட்டி அடித்து வரும் சதீஷ், சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இனி தன்னை பாக்கியலட்சுமி சீரியலில் வெறும் 15 எபிசோடுகளில் மட்டுமே பார்க்க முடியும் என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது அந்த சீரியல் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துகொண்டு தான் இருக்கிறார். இதனால் அவர் சொன்னபடி வெளியேறுகிறாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் ரேஷ்மா சமீபத்தில் வலைதள ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அதில் சீரியலில் இருந்து சதீஷ் வெளியேறும் செய்தி தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரேஷ்மா, பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சதீஷ் வெளியேறுவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. அதேபோன்று அடுத்த எபிசோட்டில் நானே இருப்பேனா என்பதும் எனக்கு தெரியாது என ரேஷ்மா தெரிவித்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியல் பார்ப்பதற்கு ரேஷ்மாவின் கதாபாத்திரமும் ஒரு முக்கிய காரணம் தான். ஆனால் இவரும் அந்த சீரியலில் இருந்து விலகுவது போல பேசியுள்ளது ரசிகர்களை சங்கடப்படுத்தியுள்ளது.