மீண்டும் இணையும் மாமன்னன் கூட்டணி..? 

 

சமூக நீதி குறித்து பேசப்படும் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்ட மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாபெரும் அளவில் வெற்றி பெற்ற படம் தான் மாமன்னன். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாமன்னன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலும் 'ரத்தினவேல்' கதாபாத்திரத்தில் பகத் பாசிலும் நடித்து இருந்தனர்.

இதில், மாமன்னன் கதாபாத்திரத்தை விட பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. 'மாமன்னன்' படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலும், பகத் பாசிலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்னமூர்த்தி இயக்கும் 'மாரீசன்' என்ற படத்தில் தான் இவர்கள் இருவரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

இந்நிலையில், தீபாவளி முன்னிட்டு மாரீசன் படக்குழு ஒரு ஸ்டில் வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இத் திரைப்படமானது சுதீஷ் சங்கர் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.