ஆர்.ஜே.பாலாஜி பரபரப்பு பேட்டி : தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் உள்ளதாம் ..!

 

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு என்ற திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அறிமுகமாகினார் ஆர்.ஜே.பாலாஜி.இதையடுத்து, நானும் ரவுடி தான், இது என்ன மாயம் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையடுத்து எல்கேஜி படத்தின் மூலம் அவர் நடிகராக அவதாரம் எடுத்தார். அப்படத்தை அவரே இயக்கி நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து வீட்ல என்ன விஷேசம், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து சொர்க்கவாசல் படத்தில் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில், சிங்கப்பூர் சலூன் படம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் உள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எல்ஜிகே படத்தில் நடித்த போது எனது தயாரிப்பாளருக்கு, தற்போது நாயன்களாக உள்ள சில தயாரிப்பாளர்களின் மகன்கள் செல்போனில் அழைத்து அவரை ஏன் நடிக்க வைக்கிறார்கள். அவர் ஏற்கனவே அதிகம் பேசுவார், இப்போது ஏன் ஹீரோவாக்குகிறீர்கள் என கேட்டதாக வெளிப்படையாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.