”தற்கொலை செய்துகொண்டு சாக நினைத்தேன்” ரோபோ சங்கர் உருக்கம்..!!
கட்டுமஸ்தான உடல் கொண்ட ரோபோ சங்கர், கடந்த சில மாதங்களாக உடல் மெலிந்து காணப்பட்டார். திடீரென ஏற்பட்ட காமாலை நோய் தான் காரணம் என்று கூறி இருந்தார். அண்மையில் நடந்த மருத்துவக் கல்லூரியில் கருத்தரங்களில் ஒன்றில் ரோபோ சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், சினிமா படங்களில் தொடர்ந்து நடிக்க எண்ணி உடல் எடையை குறைத்தேன். அதனால் மஞ்சள் காமாலை ஏற்பட்டு 4 மாதத்துக்கு மேல் படுத்த படுக்கையாகிவிட்டேன். அதற்கு முக்கிய காரணம் நான் கொண்டிருந்த சில கெட்ட பழக்கங்கள் தான்.
அப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு நான் அடிமையாகிவிட்டதால், கடந்த ஜனவரி மாதத்தில் வாழ்க்கையை வெறுத்தி தற்கொலைக்கு முயன்றேன். அப்போது பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் என்னை சரியான மருத்துவமனைக்கு அழைத்து சென்று வைத்தியம் பார்த்தார். அதனால் நான் தப்பிப் பழைத்தேன்.
மருத்துவர்கள் கொடுத்த அறிவுரைகளை நான் கேட்டு நடந்ததாலும், என் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்ததாலும் நான் இப்போது பத்திரமாக மீண்டு வந்துள்ளேன். இப்போது எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ரோபோ சங்கர் நிகழ்வில் புத்துணர்வுடன் பேசினார்.