ஆர்.ஆர்.ஆர் பட வில்லன் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று, நாட்டுக்கு பெருமை சேர்ந்த ஆர்.ஆர்.ஆர் படத்தில் வில்லனாக நடிகர் இங்கிலாந்து நடிகர் திடீர் என உயிரிழந்த செய்தி சோகமடையச் செய்துள்ளது.
 

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பிரமாண்டமான வெற்றி பெற்றது.

இந்த படத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரே ஸ்டீவன்சன் வில்லனாக நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரம், ஹீரோக்களுக்கு இணையான வெயிட்டேஜை பெற்றிருந்தது. அந்த படத்தில் அவர் மிரட்டலான நடிப்பை வழங்கி ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் இங்கிலாந்தில் உயிரிழந்துவிட்டதாக செய்தி தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உடல்நலன் குன்றியிருந்த நிலையில், அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. நடிகர் ரே ஸ்டீவன்சனின் மரணம் ஆர்.ஆர்.ஆர் பட ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.