ரூ. 17 லட்சம் கட்டணம் செலுத்தி புதிய காருக்கு நம்பர் வாங்கிய பிரபல நடிகர்..!

 

பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தன்னுடைய புதிய லம்போர்கினி யூரஸ் மாடல் காருக்கு ரூ. 17 லட்சம் கட்டணம் செலுத்தி வாகனப் பதிவு செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் இந்த பட வெளியீடு குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் புதியதால லம்போர்கினி யூரஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் காரை வாங்கினார். இந்தியாவில் இந்த காரின் ஆன்ரோடு விலை ரூ. 3.5 கோடியாகும்.

மேலும் இந்தியாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என்கிற பெருமையும் இவருக்கு கிடைத்தது புதிய காரை ‘TS09 FS 9999’ என்கிற எண்ணில் பதிவு செய்துள்ளார். என்டிஆர் குடும்பத்தினர் அனைவரும் 9999 என்ற எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்

அதனால் புதிய காருக்கும் இதே எண்ணில் பதிவு செய்ய விரும்பினார். அதற்காக ரூ. 17 செலவு செய்து இந்த நம்பரை அவர் வாங்கியுள்ளார். ஹைதராபாத்தில் ஃபேன்ஸி எண்களை ஏலம் எடுத்ததில் வாகன பதிவு துறைக்கு ரூ. 45 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.