சச்சின் படம் ரீ-ரிலீஸ்! எப்போது தெரியுமா?

 

விஜய் நடிப்பில் வெளியான படம் சச்சின். தெலுங்கில் ‘நீதோ’ என்ற பெயரில் வெளியான இந்த படத்தை தமிழில் சிறு மாறுதல்களை செய்து, விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்து 2005ல் இப்படத்தை ரிலீஸ் செய்தனர்.

சிம்பிளான கல்லூரி காதல் கதையாக இருந்தாலும், விஜய்யின் துருதுரு நடிப்பும், ஜெனிலியாவின் க்யூட் ரியாக்ஷ்னகளும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவழைத்தது. கூடவே வடிவேலுவின் ‘அய்யாச்சாமி’ காமெடி, தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளான இசையில் பாடல்களும் இணைந்து கொண்டது, வெற்றிக்கு வழிவகுத்தது.

இப்போது இளம் வயதில் இருக்கும் பலர் சச்சின் படம் வெளியான போது அதை தாங்கள் குழந்தையாக இருக்கும் போது பார்த்திருப்பர். இதனால், இப்படம் அவர்களுக்கு வெறும் படம் மட்டுமல்ல, ஒரு அழகிய தியேட்டர் நினைவும் கூட. இதனாலேயே, எத்தனை முறை இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும், எத்தனை விளம்பர இடைவேளைகள் வந்தாலும் டிவி-யையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பர்.

இந்த ஆண்டில் விஜய், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் நடித்த படங்கள் சில ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றன. அந்த வகையில், விஜய்யின் சச்சின் படமும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.

2 மணி நேரம் 23 நிமிடங்கள் நிரம்பிய இந்த திரைப்படம் சிறிது கலர் கரெக்‌ஷன் செய்யப்பட்டு வரும் 2025 ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனை, அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தெரிவித்திருக்கிறார்.