சோகம்..! கேன்சர் நோயால் உயிரிழந்த சீரியல் நடிகை..!

 

தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் காணப்படும் ராகவா லாரன்ஸ் தனது படங்களில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும்  உருவாக்கி கொடுக்கின்றார். இதனால் பல மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது.

அதேபோலத்தான் KPY பாலாவும். சின்னத்திரையில் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கேரக்டர்கள் மூலம் மக்களை மகிழ்வித்து வந்ததோடு தற்போது தன்னால் இயன்ற உதவிகளை தனது சொந்தச் செலவில் செய்து வருகின்றார். இவரது உதவும் குணங்களைப் பார்த்த ராகவா லாரன்ஸும் தற்போது இவருடன் கைகோர்த்து பல மக்களுக்கு உதவி செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வந்த நடிகை விஜயகுமாரி என்று புற்றுநோயால் காலமாகியுள்ளார்.

இவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கி சீரியல்தான் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு  புற்றுநோய் இருக்கும் தகவல் மூன்றாவது ஸ்டேஜில் தான் தெரிய வந்த நிலையில், இதற்காக 3 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதேவேளை,  இவர் ராகவா லாரன்ஸ் மற்றும் KPY  பாலாவிடம் அவர் உதவி கேட்டும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்கள். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.