சினிமாவில் இருந்து விலகுகிறேன்: சமந்தா அறிவிப்பு..!!

தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
 

தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. வரும் ஏப்ரல் 14-ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, நோய் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாற்றினார். அப்போது வெளிப்படையாக நிறைய விஷயங்களை பேசினார். எனது மிட்டாசிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது மிகவும் வேதனையாக உள்ளது. 

மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது எனக்கு பெரும் போராட்டமாக உள்ளது. அதனால் என் உடல்நிலையை கருத்தில் கொண்டு நடிப்புக்கு சில காலம் ஓய்வளிக்க விரும்புகிறேன். நல்லபடியாக திரையுலகுக்கு திரும்ப விரும்புகிறேன். நிச்சயமாக மீண்டும் நடிக்க வருவேன் என்று கூறினார்.