ரசிகர்கள் தொந்தரவால் நாகர்ஜூனாவை ‘மாமா’ என்று குறிப்பிட்ட சமந்தா..!

 

சமூகவலைதளத்தில் நடிகர் நாகர்ஜுனாவுக்கு சமந்தா வாழ்த்துச் சொன்ன பதிவையும் நெட்டிசன்கள் விவகாரத்து சர்ச்சையுடன் இணைந்து பேசி வருகிறார்கள்.

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகேஸ்வரராவின் 99-வது பிறந்தநாளை அவருடைய குடும்பத்தினர் கொண்டாடினார். அவருடைய மகனாக நடிகர் நாகார்ஜுனா  பஞ்சகச்ச வேட்டி அணிந்து கொண்டு கழுத்து சங்கிலி, மோதிரம் மற்றும் கை கடிகாரம் ஆகியவற்றை அணிந்து கொண்டு சமூவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகையும் நாகர்ஜுனாவின் மருமகளுமான சமந்தா, “நாகர்ஜுனா மாமா இது மிகவும் அழகாக உள்ளது” #ANRLivesOn என்று பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட்டுக்கு முன்னதாக நாகர்ஜூனாவை மாமா என்று குறிப்பிடாமல் தன ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவமும் சமந்தா - நாக சைத்தன்யாவின் விவகாரத்து சர்ச்சையுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது.