முன்னாள் கணவரின் பெயரை அழிக்காமல் இருக்கும் சமந்தா..!!

நடிகை சமந்தா சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, முன்னாள் கணவரின் பெயரை தாங்கிய டாட்டூவை இன்னும் அவர் அழிக்காமல் இருப்பது தெரியவந்தது.
 

தெலுங்கு சினிமா துறையைச் சேர்ந்த பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யா. அவருடன் ஏம் மாயம் சேஸாவே என்கிற படத்தில் சமந்தா இணைந்து நடித்தார். அப்போது முதல் அவர்கள் காதலிக்கத் துவங்கினர். தொடர்ந்து மனம், ஆட்டோநகர் சூர்யா, ஓ பேபி போன்ற படங்களில் இணைந்து நடித்தனர்.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதை தொடர்ந்தும் நடிகையர் திலகம், மஜிலி போன்ற படங்களில் சேர்ந்து நடித்தனர். கடந்த அக்டோபர் 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

அவர்கள் இருவரின் பிரிவு தெலுங்கு சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விரைவாக இருவரும் மனம் ஒத்து பிரிவதாக முடிவெடுத்து விவகாரத்து பெற்றனர். இதையடுத்து அவர் இருவரும் அவரவர் சேர்ந்து ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் அமேசான் பிரைம் அடுத்து தயாரிக்கும் புதிய சிரீஸில் சமந்தா நடிக்கவுள்ளார். இந்தியில் தயாராகும் இந்த சீரிஸில் கதாநாயகனாக வருண் தவண் நடிக்கிறார். இதற்கான அறிமுகக் காட்சி லண்டனில் நடந்தது. அந்நிகழ்வில் சமந்தா, வருண் தவன், தொடர் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அந்த விழாவில் சமந்தா தோன்றிய போது, அவர் உடலில் முன்னாள் கணவரின் பெயர் பொறித்த டாட்டூ இருந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாக சைத்தன்யாவை விட்டு பிரிந்தவுடன், சமந்தா தன் சமூகவலைதளப் பக்கத்தில் அவருடன் இருந்த எல்லா புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

அப்படிப்பட்ட நிலையில் விவகாரத்துக்கு பிறகும் சமந்தா தன் முன்னாள் கணவரின் பெயர் பொறித்த டாட்டூவை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார். இதனால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பலர் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் மீண்டும் சேருவார்களா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.