சகுந்தலம் தோல்வியை மறந்து லண்டன் சென்ற சமந்தா- காரணம் இதுதான்.!!

விரைவில் வெளிவரவுள்ள ‘சிட்டாடல்’ வலை தொடருக்கான ப்ரோமோஷனில் பங்கேற்க பாலிவுட் கதாநாயகன் வருண் தவனுடன் நடிகை சமந்தா லண்டனுக்கு சென்றுள்ளார்.
 

ஆங்கிலத்தில் தயாராகியுள்ள ‘சிட்டாடல்’ வலை தொடர் வரும் 28-ம் தேதி ‘அமேசான் பிரைம்’ ஓ.டி.டி தளத்தில் வெளிவருகிறது. உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், ப்ரியங்கா சோப்ரா, ஸ்டான்லி டுச்சி, லியோ வுட்டால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அதிரடி-டிராம்-சையின்ஸ்-ஃபிக்‌ஷன் கதையமைப்பில் உருவாகியுள்ள இந்த தொடர், உலகளவில் உள்ள பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்தி மொழியில் தயாராகும் இந்த தொடரில் இந்தி நடிகர் வருண் தவன் மற்றும் சமந்தா நடிக்கின்றனர். அந்த தொடரை பிரபல இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டீ.கே இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. அதில் வருண் தவன், சமந்தா, இயக்குநர்கள் ராஜ்-டீ.கே, பிரைம் வீடியோவின் இந்தியப் பிரிவு இணை எழுத்தாளர் சீதா ஆர். மேனன், பிரை வீடியோவின் இந்திய இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம், ஹெட் ஆஃப் இந்தியா ஒர்ஜினல்ஸ் அபர்ணா புரோகித் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான ‘சகுந்தலம்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அது அவரை பெரிதும் பாதித்துள்ளது. எனினும் அதை மறந்து அவர் சிட்டாடல் லண்டன் ப்ரோமோஷனில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ள சமந்தா, சிட்டாட்டல் ப்ரீமியர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. இது மிகவும் உத்வேகம் மற்றும் உற்சாகம் அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.