கர்ப்பிணியான நடிகை சனா கானை தர தரவென இழுத்துச் சென்ற கணவர்..!!

பிரபல நடிகை சனா கான் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரை கணவர் தர தரவென இழுத்துச் சென்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சனா கான். இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது சனா கான் திரை வாழ்க்கையை விட்டுவிட்டு, திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் சனா கான், பாபா சித்திக் ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்தில் கணவர் அனஸ் சயீத்துடன் பங்கேற்றார். அப்போது சனாவின் கையை பிடித்து கணவர் அனஸ் வேகமாக நடக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகின.

இதனால் கணவரால் சனா கான் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள சனா கான், இந்த வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் எங்களுடைய ஓட்டுநரை தேடிக்கொண்டிருந்தோம். மற்ற விருந்தினர்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு இருவரும் விரைந்து சென்றோம். அதை யாரும் தவறாக பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 2020 இல், சனா கான் திரைப்பட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி ஆன்மீகத்தின் புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். இந்தச் செய்தியும், அடுத்தடுத்து வரும் திருமணச் செய்தியும் பாலிவுட்டில் பல விவாதங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.