சந்தானத்தின் ரீமேக் திரைப்படம் நிறைவு- விரைவில் ரிலீஸ்..!

 

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா’ என்கிற படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 50 கோடி வசூலை ஈட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார்.

முன்னதாக கொரோனா காரணமாக இந்த படத்தின் பணிகள் தாமடைந்து வந்தன. தற்போது அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதனுடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.