இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் பிறந்தநாளுக்கு சதீஷ் கொடுத்த பரிசு. என்ன கிப்ட் தெரியுமா?

 

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.இந்நிலையில், ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர். இதைத்தொடர்ந்து, இப்படத்தின் கதாநாயகன் சதீஷ் இயக்குனரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு வாட்ச் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.