32 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த சத்யராஜ், ஷோபனா..!!
இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக சிறந்த ஒலிக் கலவை பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றவர் ரசூல் பூக்குட்டி. இவர் தான் முதன்முதலாக ஆஸ்கர் விருதை வென்ற தென்னிந்தியர் ஆவார்.
தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு ஒலி அமைப்பு மற்றும் ஒலி கலவை உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். இப்போது அவர் இயக்குநராகவும் கால்பதித்துள்ளார். அவர் முதன்முதலாக இயக்கும் படம் மலையாளத்தில் தயாராகிறது.
ரசூல் பூக்குட்டி இயக்கி வரும் படத்துக்கு ‘ஓட்ட’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆசிப் அலி மற்றும் மம்தா மோகன்தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் சத்யராஜ் மற்றும் ஷோபனா இருவரும் குணச்சித்திர வேடத்தில் நடிக்கின்றனர்.
கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ‘வாத்தியர் வீட்டு பிள்ளை’ மற்றும் ’மல்லு வேட்டி மைனர்’ ஆகிய படங்கள் சத்யராஜ், ஷோபனா இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் 32 ஆண்டுகள் கழித்து மலையாள படத்திற்காக அவர்கள் இணைந்துள்ளனர்.