கார்த்தி படத்தில் வில்லனாக களமிறங்கிய சத்யராஜ்..?

 

நடிகர் கார்த்தி தனது 26வது படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் நலன் குமாரசாமி.

தற்போது நடிகர் கார்த்தி உடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை க்ரித்தி செட்டி நடிக்கிறார். இப்படம் ஒரு மசாலா படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடித்து வருகிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று .எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் பிரபல நடிகரான சத்யராஜ் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது அறிந்ததே. தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சத்யராஜ் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே சத்யராஜ் கார்த்தியுடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம், தம்பி உள்ளிட்ட படங்களில் கார்த்திக்கு அப்பாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.