சாரக் காற்றே- வெளியானது ‘அண்ணாத்த’ படத்தின் செகண்டு சிங்கிள்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘அண்ணாத்த’ படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. அதற்கு இன்னும் சில வாரங்களே மீதமுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன.
அதன்படி இந்த படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்த மாஸு’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. டி. இமான் இசையமைத்துள்ள இந்த பாடலை மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடி இருந்தார். இது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய கடைசிப் பாடலாகும்.
இந்நிலையில் சர்பரைஸாக இந்த படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. சாரக் காற்றே என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இருவரும் இணைந்து பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த பாடல் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவின் டூயல் பாடலாக உருவாகியுள்ளது. அறிவிக்கப்பட்டது போல இன்று மாலை 6 மணிக்கு சாரக் காற்றே பாடல் வெளியானது. இதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.