’காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட இரண்டாவது பாடல் வெளியீடு..!

 

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடல் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இதனுடைய படப்பிடிப்பு கடந்த மாதம் புதுச்சேரியில் நடத்தப்பட்டு நிறைவடைந்தது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கிளான ‘ரெண்டு காதல்’ என்கிற பாடல் இந்தாண்டு பிப். 14-ம் தேதி வெளியானது. அதையடுத்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டூ...டூ...டூ’ என்கிற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது.