தினமும் நடிகை த்ரிஷா என்ன செய்கிறார் பாருங்க!

 

த்ரிஷா நாளொன்றுக்கு நிம்மதியான தூக்கம் அதில் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் நிச்சயம் கடைப்பிடிப்பார் எனக் கூறுகிறார். 

த்ரிஷா அதிகமாக வீட்டு உணவுகளைச் சாப்பிட விரும்புவாராம். குறிப்பாக வீட்டுச் சமையல் இவரது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகக் கூறுகிறார்.  

த்ரிஷாவின் பளபளப்பான சருமத்திற்கு முக்கிய காரணம் அவர் தினமும் தண்ணீர் அடிக்கடி குடிப்பதாகவும் இதனால் உடல் புத்துணர்வுடன் இருக்க உதவுவதாகக் கூறுகிறார்

த்ரிஷா யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை அதிகம் விரும்புவாராம். தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.  

த்ரிஷா காலை, மதியம் மற்றும் இரவு உணவு இவை அனைத்தும் கவனமாக நேரத்துடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும்,இதனால் உடல் புத்துணர்வுடன் இருப்பதாகக் கூறுகிறார்.  

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் சைக்கிள் ஓட்டுதல், நண்பர்களுடன் சுற்றுலா செல்லுதல் போன்ற செயல்பாடுகள் த்ரிஷாவுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறுகிறார்.   

த்ரிஷா சமீபத்தில் நடித்த பல படங்கள் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரசிகர்களுக்கு த்ரிஷாவின் அழகுக் குறிப்புகள் தெரிய அதிகம் ஆர்வம்.  நடிகை, நடிகர்களின் பழக்க வழக்கங்கள் தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும்.   

த்ரிஷாவின் மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அவர் பல்வேறு நேர்காணலில் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து இதில் எழுதப்பட்டது.