லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அப்பாவாக நடிக்கிறாரா சீமான்..!

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்க படம் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’.இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா இருவரும் அக்கா தம்பி வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, SJ சூர்யா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதீப் ரங்கநாதன் தந்தையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் விவசாயிகள் குறித்த பிரச்சனையை பேசும் படமாக இருக்கும் என்றும் சீமான் ஒரு விவசாயியாக நடித்திருக்கிறார் என்றும் இந்த படத்தில் தந்தை மகள் மற்றும் தந்தை மகன் இடையே நடக்கும் தினசரி போராட்டம் குறித்த காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் சீமான் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.