தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருக்கிறது: சனம் ஷெட்டி!

 

கடந்த வாரத்தில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி இருக்கிறது. இது ஏதோ ஒரு இடத்தில் நடக்கிறது என்று அசால்ட்டாக யாராலும் விட்டுவிட முடியாது. நாளுக்கு நாள் பாலியல் குற்றம் அதிகரித்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவிக்கு அந்த பள்ளியின் தாளாளர் கொடுத்த பாலியல் தொல்லைகள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 21 வயது கல்லூரி பெண் லிப்ட் கேட்டு சென்றபோது அவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அதுபோல அடுத்தடுத்து பல சம்பவங்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மலையாள திரை உலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும், அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு உடன்பட்டால்தான் வாய்ப்பு என்று பலர் மிரட்டப்படுவதாக சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை பல ரகசியங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகையாகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் இருக்கும் சனம் ஷெட்டி சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த வாரத்தில் கொல்கத்தா டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்ப வரைக்கும் அதற்கு தீர்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் பல அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இது குறித்து எல்லோரும் இந்த மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். இது நாளைய தலைமுறையினரின் மத்தியில் ஏதாவது ஒரு பாதுகாப்பு கிடைக்குமா என்பதற்காகத்தான் ஒரு போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

பாலியல் குற்றங்களுக்கு இந்தியா முழுக்க இருக்கிற பனிஷ்மென்ட் போதாது, தண்டனைகள் கடுமையாக கொடுத்தால் தான் எவனும் ஒரு பொண்ணை தொடறதுக்கு ஆயிரம் முறை யோசிப்பான். இல்லன்னா பணம் பதவியை வைத்து பல பேர் எஸ்கேப் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஒரு அவேர்னஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போலீஸிடம் அனுமதி கேட்டு வந்திருக்கிறோம் என்று சனம் ஷெட்டி பேசியிருக்கும் நிலையில் அவரிடம் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது போல தமிழிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு சனம் உண்மையில் நான் ஹேமா அறிக்கையை ரொம்பவே பாராட்டுகிறேன். அவங்க வெளிப்படையாக இதுதான் நடக்கிறது என்று வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறாங்க. அதனால் நான் ஹேமாவக்கு சல்யூட் சொல்கிறேன். இந்த மாதிரி தமிழ் இன்டஸ்ட்ரியில் நடக்கிறதா என்று கேட்டால் ஆமாம் நடக்கிறது என்று தான் சொல்வேன். இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. என்னுடைய பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி நான் இரண்டு நாள் முன்னாடி போட்ட வீடியோவில் கூட சொல்லி இருக்கிறேன். பலர் கேட்பார்கள் இந்த சம்பவம் நடந்தபோதே நீங்க சொல்லி இருக்கலாமே என்று சொல்கிறார்கள். எனக்கு அச்செஸ்மென்ட் பிரச்சனை நடந்த போது நான் அந்த இடத்திலேயே என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவனிடம் செருப்பால அடிப்பேன் நாயே என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணுனா தான் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று வர்ற போன் காலை நான் அங்கேயே ஆப் செய்து இருக்கிறேன். ஆனால் தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் எல்லோரும் மோசம் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர்தான் தப்பான அர்த்தத்தில் பேசுகிறார்கள். இப்போ நான் நடிச்ச எல்லா ப்ராஜெக்ட்டுமே 100% நல்லவங்க இருக்கிறவங்க. ப்ராஜெக்ட் தான் நடித்து இருக்கிறேன் என்று சனம் ஷெட்டி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.