பிரபல சீரியலில் இருந்து விலகிய ஷபானா..!

 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’மிஸ்டர் மனைவி’ என்பதும் 300 எபிசோடுகளுக்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பவன் ரவீந்தரா, ஷபானா நடித்து வரும் இந்த சீரியலில் நடிகை அனுராதா, ரஞ்சிதம் என்ற பாட்டி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி இயக்குனர் ஏ வெங்கடேஷ், வேதநாயகம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியல் கடந்த ஒரு வருடமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த சீரியல் இருந்து விலகுவதாக ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார்.

’மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என்றாலும் அந்த சீரியலில் இருந்து முக்கிய காரணத்தினால் நான் விலகுகிறேன், அந்த சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது, அந்த கேரக்டர் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கேரக்டராக எனக்கு அமைந்தது என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் எனது புதிய ப்ராஜெக்ட் காரணமாகவும் புதிய கேரக்டர் காரணமாகவும் நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் என்றும் உங்களிடமிருந்து ஷபானா என்ற அஞ்சலி விடைபெறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.