நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் ஹீரோ : ஷாருக்கான், சல்மான் கான், அமிர்கான்..!
Mar 4, 2024, 07:05 IST
மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் ப்ரீ வெட்டிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜாம்நகர் களைகட்ட தொடங்கியுள்ளது.
ப்ரீ வெட்டிங்கின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் கொண்டாட்டங்கள் களைகட்டின.அதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமிர்கான் உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் ஒரே மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.