ஷாருக்கானுக்கு பலத்த காயம்… அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டார்!

 

சுஜோய் கோஷ் இயக்கும் 'தி கிங்' திரைப்படம், ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் (Red Chillies Entertainment) மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுஹானா கானும் (Suhana Khan) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தந்தை-மகள் இடையேயான உறவை மையப்படுத்திய அதிரடி ஆக்‌ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

மும்பையில் 'தி கிங்' படத்தின் அதிரடி சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்த போது இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சண்டைக் காட்சியில் ஈடுபட்டிருந்த ஷாருக்கானுக்கு திடீரென பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும், ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. காயம் ஏற்பட்ட உடனேயே அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் உடனடியாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், படக்குழுவினர் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனைகளை குவித்து வருகின்றனர்.

'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களின் மெகா வெற்றிக்குப் பிறகு, ஷாருக்கான் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த விபத்து அவரது ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஷாருக்கான் பூரண நலம் பெற்று விரைவில் படப்பிடிப்பிற்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.