ஆண் ரசிகரின் விவகாரமான கேள்விக்கு வேடிக்கையாக பதில் கூறிய ஷாரூக்..!!

‘என் நண்பனுக்கு உங்கள் மேல் முழு ஈர்ப்பு உண்டு’ என்று ஆண் ரசிகர் ஒருவர் கூறியதற்கு பாலிவுட் கிங் ஷாருக்கான் கொடுத்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

பதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் கிங் கான் ஷாருக்கான் தனது அடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் ஷாருக்கான், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில், ஷாருக் ட்விட்டரில் Ask SRK அமர்வு ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர்கள் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

சிலர் வேடிக்கையான கேள்விகளை எழுப்பி இருந்தனர். அவற்றுக்கு ஷாருக்கும் தனது ஸ்டைலில் சரியான பதில் கொடுத்தார். ஒரு ரசிகர் அவரது நண்பர் உங்கள் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருக்கிறான். நான் என்ன செய்வது என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஷாரூக் “உங்களால் என்ன செய்ய முடியும்? எதுவும் முடியாது, என்னிடம் சொல்லுங்கள் நான் என்ன செய்யட்டும்” என்று வினவியுள்ளார்.

அதை தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ‘டாங்கி’ என்கிற படத்தில் நடிக்கிறார். இதில் ஷாருக்கிற்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பதான் வெற்றியில் ஷாருக்கின் அடுத்த படங்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.