நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனுக்கு ஷாரூக்கான் அட்வைஸ்..!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்ட பதிவுக்கு பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் ஷாரூக்கான் தெரிவ்த்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ, இந்தி சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது முதல் இந்திப் படத்திலேயே ஷாரூக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் பார்வையும் அவர் மீது விழுந்துள்ளது.

அண்மையில் ஜவான் பட ப்ரிவியூ வெளியானது. அதற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் எதிர்நோக்கும் படமாக ஜவான் மாறியுள்ளது. பல பிரபலங்கள் ஜவான் ப்ரிவியூக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வரிசையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது வாழ்த்துச் செய்தியை இன்ஸ்டாவில்  ஸ்டோரியாக வைத்திருந்தார். படத்துக்காக அட்லீ செய்துள்ள உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. நயன்தாராவுக்கு இதுவொரு ட்ரீம் டெப்யூ என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ஷாரூக்கான், தங்களுடைய மனைவி நயன்தாராவிடம் சற்றும் ஜாக்கிரதையாக இருங்கள். இப்போது அவர் பஞ்ச் மற்றும் கிக்ஸ் பழகி வருகிறார் என்று நகைச்சுவையாக ஷாரூக்கான் பதிலளித்துள்ளார். இது சமூகவலைதளத்தில் வைரலை கிளப்பியுள்ளது.