கணவருக்கு விலையுயர்ந்த பைக்கை பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஷாலினி..!!

 

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அதை தரமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்காக தனது முழு உழைப்பையும் போட்டு நடித்து வருகிறார் .

அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி முழுக்க முழுக்க இப்படம் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது படக்குழு குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறது .

அதேபோல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம்ப தலையும் பைக் ரைடு அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது என நேரத்தை செலவிட்டு வருகிறார் .

இந்நிலையில் உழைப்பாளர் தினமான நேற்று நடிகர் அஜித் தனது 53 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார் .

ரசிகர்களோடு, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர் நடித்த பழைய படங்களான தீனா, மங்காத்தா, பில்லா ஆகியவை சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஷாலினி, அஜித் அவர்களுக்கு மிகவும் பிடித்த டுகாட்டி பைக்கை பரிசாக வழங்கி இருக்கிறார்.

திட்ட தட்ட 30 லட்சம் மதிப்புள்ள இந்த பைக்கின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் அஜித் அவர்களுக்கு ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார் .