இணையத்தில் வைரலாகும் ஷாலினி ஜோயாவின் இன்ஸ்டா ஸ்டோரி ..!
Jul 30, 2024, 08:05 IST
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர்தான் ஷாலினி ஜோயா. இவர் மலையாள நடிகையாக இருந்த போதும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
சமையல் காமெடி என கலகலப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் ஷாலினி சோயாவின் நடவடிக்கைகள் காணப்பட்டன. அவரது பேச்சும் கியூட் ரியாக்ஷனும் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தன.
எனினும் குக் வித் கோமாளியின் இறுதியாக நடைபெற்ற எபிசொட்டில் ஷாலினி ஜோயா எலிமினேட் ஆகி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் சோகமான கமெண்ட்களை கொடுத்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், ஷாலினி ஜோயா எலிமினேட் ஆனதற்கு ரசிகர்கள் பதிவிட்ட வீடியோ பதிவுகளை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தமது வருத்தத்தை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.